பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விஷேட கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.