முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் பாணந்துறை அலுவலகம் இன்று அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான்” நாட்டில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய பிரச்சினைகள் காணப்படுகின்றது. இப் பிரச்சினைகளினால் 80 வீதமானபெண்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
நாம் இவர்களுக்காக சிறந்த வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.மக்களின் குரலாக மக்களின் தேவையறிந்து நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எனவே எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” இவ்வாறு திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.