”இனிவரும் காலங்களில் மக்களின் குரலாக ஒலிவாங்கி சின்னம் மக்களுக்காக முன்னின்று செயற்படும்” என ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் அசேல சம்பத் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாட்டில் பலமிக்க எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவோம். நாம் நாட்டுமக்களுக்காக குரல் கொடுத்த சந்தர்ப்பங்களில் பிரதான அரசியல்கட்சிகள் எமக்கான சந்தர்ப்பங்களை வழங்கவில்லை.
விலைவாசி அதிகரித்த சந்தர்ப்பத்தில் வீட்டின் சமையலறைப் பிரச்சினையை முன்னிறுத்தியே நாம் குரல்கொடுத்தோம்.
இனிவரும் காலங்களில் மக்களின் குரலாக ஒலிவாங்கி சின்னம் மக்களுக்காக முன்னின்று செயற்படும்.
நாட்டு மக்களுக்காக குரல்கொடுப்பதற்கு பலமிக்க எதிர்க்கட்சியாக நாம் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மக்கள் சந்தரப்பம் வழங்குவார்கள் என நம்புகின்றோம்” இவ்வாறு அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.