ஹமாஸின் உயர்மட்ட தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar), பாலஸ்தீனப் பகுதியில் தமது படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் சுமார் 1,200 பேரைக் கொன்று 251 பேரை பணயக் கைதிகளாகக் கைப்பற்றிய முன்னோடியில்லாத 2023 ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கு சின்வார் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
அவரது உயிரிழப்பு இஸ்ரேலுக்கு ஒரு பெரிய வெற்றியைக் குறிப்பதுடன், ஒரு வருட கால மோதலில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
அவரது மரணம் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பை வழங்கியதாக மேற்கத்திய தலைவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
ஹமாஸின் தீய ஆட்சியின் வீழ்ச்சியில் அவரது உயிரிழப்பு ஒரு முக்கிய அடையாளமாகும்.
ஹமாஸ் இனி காசாவை ஆளப்போவதில்லை.
ஹமாஸுன் கொடுங்கோன்மையில் இருந்து விடுவித்துக் கொள்ள காசா மக்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்று கூறினார்.
கடந்த ஜூலை மாதம் ஈரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்னர், ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக சின்வார் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் அவரின் மரணம் குறித்து ஹமாஸ் இன்னும் கருத்து தெரிவிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.