அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் நேற்று (20) மாலை மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு ஏரியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.