தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு (NTC) புதிய தலைவர் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களுக்கு அமைச்சரவை நேற்று (21) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிய தலைவராக கலாநிதி பாண்டுர திலீப விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.
ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய உறுப்பினர்கள்:
- டபிள்யூ. ரவி பிரசாத் டி மெல் – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்
- கலாநிதி நாமலி தரங்க சிறிசோம – சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்
- ஏ.ஐ.யு. பெரேரா – உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர்