அண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறித்துள்ளார்
இதில் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்
அத்துடன் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அங்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுக் கொள்ளைப் புலனாய்வுப் பிரிவில் நாளை ஆஜராகி, அது தொடர்பான சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கத் தயார் என .ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.
அதையடுத்து, மனுவை வரும் 25ம் தேதி விசாரிக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது