இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி, 5 விக்கெட்டுகளினால் மேற்கிந்தியத்தீவுகளை வீழ்த்தியிருந்தது.
அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கும் அறிமுக வீரர் நிஷான் மதுஷ்காவுக்கும் இடையிலான 137 ஓட்ட இணைப்பாட்டம் ஆனது டக்வெத் லூவிஸ் விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட 232 என்ற ஓட்ட எண்ணிக்கை துரத்தலில் இலங்கை அணிக்கு பெரிதும் பங்களிப்பாக அமைந்தது.
இந்த நிலையில் தொடரின் இரண்டாவது ஆட்டமானது இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எவ்வாறெனினும், நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலையால் கண்டி, பல்லேகலயில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் 75% உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டி நேரம் முழுவதும் கணிசமான மேகமூட்டமான வானிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.