எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (23) முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும், ஊழியர்களுக்கு அவசர அல்லது திடீர் சுகயீன விடுமுறை தேவைப்படுமானால், மாகாண பிரதி தபால் மா அதிபரின் அனுமதிக்கு உட்பட்டு விடுமுறையை அங்கீகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்கு கையிருப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் இடம்பெறவுள்ளதால் மேற்கண்ட தீர்மானம் அறிக்கப்பட்டுள்ளது.