இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைதான சந்தேகநபர்கள் மூவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று (24) பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்.
பொதுமக்கள் உள்ளூர், வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.