பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணமான சரக்குக் கப்பலின் உரிமையாளரும் மேலாளரும் அமெரிக்க நீதித்துறையால் தொடரப்பட்ட வழக்கைத் தீர்ப்பதற்கு 100 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
கப்பலின் உரிமையாளர் கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மேலாளர் சினெர்ஜி மரைன் குழுமத்தின் மீது நீதித்துறை வழக்குத் தொடுத்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த தீர்வு வந்துள்ளது.
நீருக்கடியில் குப்பைகளை அகற்றவும், நகரின் துறைமுகத்தை மீண்டும் திறக்கவும் அரசாங்கம் செலவழித்த நிதியை மீட்டெடுக்க கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பால்டிமோர் நகரில் இருந்து கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு புறப்பட்ட டாலி என்ற கப்பலே விபத்துக்குள்ளானது.
டாலியில் உள்ள மின் மற்றும் இயந்திர அமைப்புகள் முறையற்ற முறையில் பராமரிக்கப்பட்டதால், கப்பலின் திசைமாற்றி செயலிழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் கப்பலில் பயணித்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.