வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று 113 ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்த சாதனையை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது
அதன்படி புனேயில் இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 156 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இன்னிலையில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சுக்காக 255 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இந்திய அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், அந்த இலக்கை அடைய முடியாமல் இந்திய அணியால் 245 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.சிறப்பாக பந்துவீசிய மிட்செல் சான்ட்னர் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது