ரஞ்சன் ராமநாயகவின் நாடாளுமன்ற பயணத்தை ஒருபோதும் நிறுத்தி விட முடியாது” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் முதலாவது கன்னி மாநாடு, கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயகக் குரல் என்பது புதியக் கட்சி என்றாலும், இங்குள்ள மக்களின் கூட்டத்தைப் பார்க்கும்போது
பொறுப்புவாய்ந்த ஒரு அரசியல் கட்சிக்கான அஸ்திவாரத்தை இட்டுள்ளோம் என்பது தெரிகின்றது.
அரசாங்கத்திற்குள் எதிர்க்கட்சியை உருவாக்கி, அதிலுள்ள மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்தான் எமது கட்சியின் தலைவராக உள்ளார். எமக்கு அரசாங்கத்திற்குள் எதிர்க்கட்சியை உருவாக்க முடியும் என்பதோடு, எதிர்க்கட்சிக்குள் அரசாங்கத்தை உருவாக்கவும் முடியும்.
எமது கட்சியின் தலைவர் ரஞசன் ராமநாயக்க நாடாளுமன்றுக்கு செல்வதைத் தடுக்க
உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவரது நாடாளுமன்ற பயணத்தை ஒருபோதும் நிறுத்தி விட முடியாது. நாம் யாருக்கும் அஞ்சப் போவதில்லை.
ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றுக்கு வருவதையிட்டு அஞ்சும் தரப்பினரே
அவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். எமது பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது” இவ்வாறு ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.