தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதம் -0.8% ஆகக் குறைந்துள்ளது.
2024 செப்டெம்பரில் இது -0.5% ஆக பதிவானதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், 2024 செப்டெம்பரில் -0.3% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஒக்டோபரில் 1.0% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், உணவு வகை அல்லாத பணவீக்கம் 2024 செப்டெம்பரில் -0.5%இல் இருந்தது.
அது ஒக்டோபரில் -1.6% ஆகக் குறைந்துள்ளது.