தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அறுகம்பை வளைகுடா பகுதியில் தாக்குதல் நடத்தலாம் என கிடைத்த புலனாய்வு தகவல் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனத் தகவல் கிடைத்தவுடன் அவர்களின் பாதுகாப்பையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சந்தேக நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டில் நாங்கள் மாலைத்தீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்களை கைது செய்யது, விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தாக்குதல் திட்டம் தொடர்பான இறுதி முடிவுக்கு வர முடியாது.
எனவே, இவர்களின் கைது தொடர்பான தேவையற்ற விளக்கங்கள் மற்றும் போலியான செய்திகளை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.