உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மிக்-29 போர் விமானம் திங்கள்கிழமை (04) வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
பஞ்சாப் மாநிலம் அடம்பூரில் இருந்து விமானம் புறப்பட்டு, பயிற்சிக்காக ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் தரையில் வீழ்ந்து தீப்பிடித்த போது, விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
விபத்து குறித்து சமூக ஊடகங்களில் வெடியான வீடியோக்கள், விமானம் தீப்பற்றி எரிவதை வெளிக்காட்டியுள்ளது.