பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan), அவரது பந்துவீச்சு நடவடிக்கையை அதிகாரப்பூர்வ மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாகத்தால் (ECB) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
கவுண்டி சாம்பியன்ஷிப்பில் (County Championship) சர்ரே அணிக்காக ஷகிப் அல் விளையாடும் போது, கள நடுவர்களால் அவரது பந்து வீச்சு நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்தே 37 வயதான பங்களாதேஷ் நட்சத்திரத்தின் பந்துவீச்சு நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
ஷகிப் அல் ஹசன், கடந்த செப்டம்பரில் டவுன்டனில் நடந்த சோமர்செட் அணிக்கு எதிரான ஒரு முக்கியமான போட்டியின் போது 63 ஓவர்களுக்கும் அதிகமாக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.
இதன்போது கள நடுவர்களான ஸ்டீவ் ஓ’ஷாக்னெஸ்ஸி மற்றும் டேவிட் மில்ன்ஸ் ஆகியோரால் அவரது பந்துப் பரிமாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக ESPNcricinfo தெரிவித்துள்ளது.
2010-11 இல் வொர்செஸ்டர்ஷையர் (Worcestershire) அணிக்காக விளையாடிய பின்னர் முதல் முறையாக ஷாகிப், கடந்த செப்டெம்பரில் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.