நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்
1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
1. துறைராசா ரவிகுமார் – 11இ215
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்
1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்
1. காதர் மஸ்தான் – 13,511