திருகோணமலையில் சட்டவிரோத வலை மற்றும் வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இன்று (20) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை கடற்படை, கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.