பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கைக்கான தூதுவர் Khaled Naser Al Ameri ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதுள்ளது
இச்சந்திப்பில், ஜனநாயகக் கோட்பாடுகளில் பொதுமக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டியதுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியும் திறமையான மற்றும் தொழில்சார்ந்த இலங்கையர்களின் சேவைகளைப் பாராட்டுவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிரிவின் மேலதிக செயலாளர் யசோஜா கே குணசேகர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்