அம்பாறை, திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 10 பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அந்த நிவாரணக் குழுவினர் இன்றும் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, அம்பாறை, நாவின்னாவேலி, திருகோணமலை, மயிலாப்பஞ்சேணி, சபிநகர், முட்டுச்சேனை (துக்குவா சந்தி), மூதூர் சந்தி, கட்டப்பறிச்சான், பராக்கிரமபுர (மாஓயா) மற்றும் புத்தங்கல (மணல் கால்வாய்) ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளையும், சமைத்த உணவுகளை விநியோகித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளையும் படகுகளில் பயணித்து மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடற்படையின் மேலதிக நிவாரணக் குழுக்கள் (125) தேவைக்கேற்ப ஈடுபடுத்த தயாராக இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.