அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது மதிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள எம்.பி.க்களுக்கான வீடுகளைத் திருப்பி ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவின் கருத்துப்படி, புதிதாக தெரிவு செய்யப்பட்ட 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிவெல வீடமைப்புத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவான 20 முன்னாள் எம்.பி.க்களுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, மதிவெல வீட்டுத் தொகுதியில் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு அனைத்து முன்னாள் எம்.பி.க்களுக்கும் புதிய அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டது.
அந்த நேரத்தில், பல முன்னாள் எம்.பி.க்கள் தங்கள் வீடுகளைத் திருப்பித் தர தவறியதாகவும், சிலர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மதிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.