2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் மீதான வாக்கெடுப்பு வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கப் பணிகளை தொடர்வதற்கும் கடன் செலுத்துவதற்குமான நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் கடந்த 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இது தொடர்பில் நேற்றும் (05) இன்றும் நாடாளுமன்றத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றது.
அதன்படி, இன்றைய விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பின்றி நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.