முன்னாள் உலக சாம்பியனான சைக்கிள் பந்தய வீரர் ரோஹன் டென்னிஸ் (Rohan Dennis), அவுஸ்திரேலியாவில் நடந்த கார் விபத்தில் தனது மனைவியும், சகல ஒலிம்பிக் வீராங்கனையுமான உயிரிழந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
2023 டிசம்பர் 30 அன்று, அடிலெய்டில் உள்ள அவர்களது வீட்டிற்கு வெளியே ரோஹன் டென்னிஸ் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதில் இரண்டு குழந்தைகளின் தாயான ஹோஸ்கின்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தன் பின்னர் உயிரிழந்தார்.
34 வயதான வீரர், முதலில் ஆபத்தான நிலையில் வாகனத்தை செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியதாகவும், உரிய கவனிப்பு இல்லாமல் வாகனம் செலுத்தியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த நிலையில், ஹோஸ்கின்ஸ் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் பற்றி சில விவரங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
அதில், ரோஹன் டென்னிஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், ஹோஸ்கின்ஸ் அருகாமையில் இருந்தபோது வாகனத்தை செலுத்தியதாகவும், அந்தச் செயல் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று தெரிந்தும் அல்லது அது நடக்குமா என்பதில் அலட்சியமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிதத் குற்றச்சாட்டுக்கு ரோஹன் டென்னிஸுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்தாண்டு வாகன சாரதி உரிமம் இழப்பு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் டென்னிஸ் பிணையில் உள்ளார், ஜனவரி 24 அன்று அடுத்த வழக்கு விசாரணையின் போது அடிலெய்டின் மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.