நுகேகொடை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டார்.
கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப்பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், சந்தேக அந்நபர் தனக்கு நெருக்கமான மற்றுமொரு குழுவினருடன் இணைந்து இந்த மோசடியைப் புரிந்துள்ளதாகவும், மோசடியாகப் பெறப்பட்ட பணம் சந்தேகநபரின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.















