சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாக திகழ்வதுதான் கார்த்திகை மாதமாகும்.
அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது.
அந்த கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை எந்த முறையில் வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரித்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.
அன்று முழுவதும் தங்களுடைய உடல் நிலைக்கு ஏற்றவாறு எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உணவே சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.
மாலை நேரத்தில் வீட்டில் முருகப்பெருமானின் சிலையோ வேலோ இருக்கும் பட்சத்தில் அதற்கு தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை சிலை, வேல் இல்லாதவர்கள் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் தேனை ஊற்றி ஊற்றி நெய்வேத்தியமாக வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
பிறகு செவ்வரளி மலர்களைக் கொண்டு முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஓம் சரவணபவ நமஹ என்னும் மந்திரத்தை 108 முறை கூறி செவ்வரளி மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அபிஷேகம் செய்த தேனாக இருந்தாலும் நெய்வேத்தியமாக வைத்த தேனாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு சொட்டு தேனையாவது நம்முடைய உள் நாக்கில் தடவிக் கொள்ள வேண்டும்.
இப்படி கார்த்திகை கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கக்கூடிய தீராத நோய்கள் தீருவதற்குரிய வழிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.