நாடாளுமன்ற ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 5 இலட்சத்து 835 வாக்குகளைப் பெற்ற, புதிய ஜனநாயக முன்னணி 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்களாக 5 ஆசனங்களைக் கைப்பற்றியது.
அதற்கமைய, ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் எஞ்சியிருந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்துக்காக, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.