தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol)”இறுதிவரை போராடுவேன்” என்று வியாழனன்று (12) சபதம் மேற்கொண்டார்.
இராணுவச் சட்டத்தை சுமத்துவதற்கான தோல்வியுற்ற முயற்சியில் பதவி விலகுவதற்கான அழைப்புகளை எதிர்கொண்ட அவர், தனது நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானது மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்றார்.
இராணுவ சட்டம் குறித்து கவலையை ஏற்படுத்தியமைக்காக பொது மக்களிடம் மன்னிப்புக் கோரிய யூன், நாட்டின் அரசாங்கத்தை முடக்குவதற்கும், நாட்டின் அரசியலமைப்பு ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் காரணமான சக்திகள் மற்றும் குற்றவியல் குழுக்கள் கொரியா குடியரசின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதைத் தடுக்க நான் இறுதிவரை போராடுவேன் என்று ஒரு நீண்ட தொலைக்காட்சி உரையில் அறிவித்தார்.
தாராளவாத ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி அதிகாரத்தை யூன் மீறியதாகக் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக ஒரு புதிய பதவி நீக்கத் தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்தாக இந்த தொலைக்காட்சி உரையாடல் வந்துள்ளது.
மேலும், ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரத்தின் குழப்பமான தலைவர், தென் கொரியாவின் தேர்தல் ஆணையத்தை வட கொரியா ஹேக் செய்ததாககவும், ஏப்ரல் மாதம் தனது கட்சியின் மகத்தான தேர்தல் தோல்வி குறித்து சந்தேகத்தையும் அவர் இதன்போது எழுப்பினார்.
யூன், கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி முன்வைத்த இராணுவச் சட்டம், தென் கொரியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முதன்முறையாக, அரசியல் குழப்பத்தை உருவாக்கியது மற்றும் அவரை வெளியேற்றுவதற்கு அழைப்பு விடுக்கும் பெரிய எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த ஆணை நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய படையினர் நாடளுமன்றத்தை சுற்றி வளைக்க வகுத்தது மற்றும் தேர்தல் ஆணையத்தை சோதனை செய்தது.
எனினும், பெரிய வன்முறை அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இராணுவச் சட்டம் ஆறு மணி நேரம் மட்டுமே நீடித்தது, பின்னர் தேசிய சட்டமன்றம் ஒருமனதாக அதை நீக்குவதற்கு வாக்களித்ததைத் தொடர்ந்து சடத்தை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எவ்வாறெனினும், சனிக்கிழமையன்று (14) யூன் இரண்டாவது பதவி நீக்க வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது அரசியல் சகாக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு குறைந்து வருகிறது.
பதவி நீக்க வாக்கெடுப்பானது சனிக்கிழமையன்று அந் நாட்டு நேரப்படி சுமார் மாலை 5:00 மணிக்கு (0800 GMT) நடைபெறும்.
தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற ஆளும் மக்கள் சக்தி கட்சியின் (PPP) எட்டு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.