பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 2021 ஆம் ஆண்டு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் நட்டஈடாக பிரதிவாதிகள் 75,000 ரூபா செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதிவாதிகளில் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஆகியோர் அடங்குவர்.
ஆசாத் சாலி 2021 மார்ச் 9 அன்று செய்தியாளர் சந்திப்பில் மதங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுக்காக 2021 மார்ச் 16 அன்று கைது செய்யப்பட்டார்.
ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த பின்னர், 2021 டிசம்பர் 2 அன்று கொழும்பு மேல் நீதிமன்றினால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.