வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதேவேளை , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை அடுத்து சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 19 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.