அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) நிலையான நிலையில் உள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 285.94 ரூபாவாகவும், 294.51 ரூபாவாகவும் உள்ளது.
மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று நிலையான நிலையில் உள்ளது.