பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகம் Anne-Marie Descôtes ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதுள்ளது .
இந்த சந்திப்பில், பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையேயான இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதுள்ளது
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த பிரான்ஸின் உறுதிப்பாட்டை பொதுச் செயலாளர் டெஸ்கோட்ஸ் வலியுறுத்தினார். மேலும், இக்கலந்துரையாடலில், கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்துடன் (RCMS) ஒப்பந்தம் செய்து கொள்வதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பிரான்ஸ் அரசாங்கத்துடன் வலுவான உறவுகளைப் பேணுவதற்கு இலங்கையின் பாராட்டுக்களை வலியுறுத்திய பிரதமர், கல்வியின் தரம், தொழிற்கல்வியை வலுப்படுத்துதல், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் பிரான்சுடன் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடினார்.
இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) மஹிந்த குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவு உதவிப் பணிப்பாளர் அதுரலிய மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்