தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரமாக திகழக்கூடியது தான் மார்கழி மாதம் என்பதும் மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பகவானை கூறி இருக்கிறார்.
அவ்வளவு சிறப்பு மிகுந்த மார்கழி மாதத்தில் இன்னும் பல சிறப்புகள் நிறைந்துதான் இருக்கின்றன.
முழுக்க முழுக்க தெய்வீக வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழக்கூடிய இந்த மார்கழி மாதத்தில் நாம் அன்றாடம் நம்முடைய வீட்டில் எந்த செயல்களை செய்தால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கி சிறப்பான வாழ்க்கை அமையும்.
சிறப்பான வாழ்க்கை அமைய மார்கழி மாதம் மார்கழி மாதம் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மாதமாக கருதப்படுகிறது.
குறிப்பாக சிவபெருமானுக்கு மார்கழி மாதத்தில் தான் ஆருத்ரா தரிசனம் என்பது நடைபெறும்.
அதேபோல் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதேசியும் மார்கழி மாதத்தில் தான் வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் அனுமன் ஜெயந்தியும் மார்கழி மாதத்தில் தான் வருகிறது. இப்படி அனைத்து தெய்வங்களுக்கும் மார்கழி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதமாகவே கருதப்படுகிறது.
அப்படிப்பட்ட மார்கழி மாதத்தில் நம்முடைய வீட்டையே ஒரு கோவிலாக மாற்றினோம் என்றால் நிச்சயமாக அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மார்கழி மாதம் என்றதும் பலரும் தங்களுடைய இல்ல வாசலில் கோலம் போடும் பழக்கம் என்பது வைத்திருப்பார்கள்.
இதுதான் முதலில் நாம் செய்ய வேண்டிய செயல். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நம் வீட்டு வாசலில் கோலம் போட வேண்டும். அடுத்ததாக நம் வீட்டு நிலை வாசலுக்கு வெளியே இரண்டு தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.
பிறகு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய தீபங்களை ஏற்ற வேண்டும். கண்டிப்பான முறையில் மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சாம்பிராணி தூபம் என்பதை காலையில் வீடு முழுவதும் போட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் தெய்வ வசியம் என்பது நம் வீட்டிற்கு ஏற்படும். இந்த செயல்களை காலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் செய்து முடிப்பது என்பது அதீத பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது.
அடுத்ததாக தினமும் நாம் பூஜை செய்யும் பொழுது நாம் யாரை குருவாக நினைக்கிறோமோ அவர்களை நினைத்து அவர்களின் பெயரை சொல்லி அவர்களை வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு தான் தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்தில் தனுர் பூஜையில் கலந்து கொள்ளலாம். வசதி மிக்கவர்கள் மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது அந்த பூஜைக்குரிய அனைத்து பொருட்களையும் வாங்கித் தரலாம்.
வசதியற்றவர்கள் அந்த பூஜைக்கு தேவையான ஏதாவது ஒரு பொருளை மட்டுமாவது வாங்கி கொடுத்து அந்த தனுஷ் பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்களும் கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
அதே போல் தங்களால் இயலும் பட்சத்தில் இந்த மார்கழி மாதத்தில் அன்னதானம் செய்வது என்பது மிகவும் சிறப்பு.
அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் இல்லாதவர்களுக்கு உணவு தானம் செய்வதன் மூலம் நமக்கு சிறப்பான வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.