ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா மற்றும் நிசான் ஆகியவை சாத்தியமான ஒன்றிணைவு குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
அதன்படி, மார்ச் மாதத்தில் இரண்டு ஜப்பானிய கார் தயாரிப்பாளர்களும் மின்சார வாகன உற்பத்திக்கான ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஆராய ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இரு நிறுவனங்களும், “இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தபடி, ஹோண்டாவும் நிசானும் எதிர்கால ஒத்துழைப்பிற்கான பல்வேறு சாத்தியங்களை ஆராய்ந்து, ஒருவருக்கொருவர் பலத்தை மேம்படுத்துகின்றன” என்று பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ளன.
விவாதங்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தெரிந்து கொள்ளப்படுகிறது.
ஜப்பானிய தொலைக்காட்சி அலைவரிசையான TBS இன் படி,
இரண்டு நிறுவனங்களும் அடுத்த வார தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஜப்பானின் நம்பர் டூ மற்றும் நம்பர் 3 கார் உற்பத்தியாளர்களிடையே சாத்தியமான இணைப்பு பல விடயங்களில் சிக்கலாக அமையலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எந்தவொரு ஒப்பந்தமும் ஜப்பானில் தீவிர அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம், ஏனெனில் அது பெரிய வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
ஒப்பந்தம் மூலம், நிசான் பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான ரெனால்ட் உடனான தனது கூட்டணியை முறித்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறெனுனும் இது தொடர்பில் வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து டோக்கியோவில் நிசான் பங்குகள் 20% அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டன. ஹோண்டா பங்குகள் சுமார் 2% சரிந்தன, அதேநேரத்தில் மிட்சுபிஷியின் பங்குகள் 13% உயர்ந்தன.
சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் சந்தைப் பங்கை இழந்து வருகின்றன, இது நவம்பரில் உலகளாவிய மின்சார வாகன விற்பனையில் 70% பங்கைக் கொண்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் 2023 இல் 7.4 மில்லியன் வாகனங்களின் உலகளாவிய விற்பனையை இணைத்துள்ளன. எனினும் BYD போன்ற மலிவான மின்சார வாகன தயாரிப்பாளர்களுடன் போட்டியிட போராடி வருகின்றன.
மின்சார வாகன (EV) தயாரிப்பாளர்களுக்கு எதிராக, குறிப்பாக சீனாவின் வாகன உற்பத்தி அதிகரிப்புக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு தொழில்துறை மாறியதாலும், சீனாவில் அதன் உற்பத்தி அதிகரித்து வருவதால், பல கார் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியில் முட்டி மோதுகின்றன.