கட்டாரின் தோஹாவில் அமைந்துள்ள லுசைல் மைதானத்தில் நடந்த 2024 ஃபிஃபா இன்டர்காண்டினென்டல் கிண்ண (FIFA Intercontinental Cup) இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் பச்சுகாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் சம்பியன் பட்டம் வென்றது.
புதன்கிழமை (18) நடைபெற்ற இப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி நட்சத்திரங்களான கைலியன் எம்பாப்பே, ரோட்ரிகோ மற்றும் வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் கோல்களை அடித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை வென்றபோது, அவரது ஹாட்ரிக் வீணான அதே மைதானத்தில் பிரெஞ்சு வீரர் எம்பாப்பே, அணியின் மூன்று கோல் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினார்.
பச்சுகா இந்தப் போட்டியில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும், 37 ஆவது நிமிடத்தில் மாட்ரிட் தனது முதல் கோலை அடித்தது.
பின்னர் இரண்டாவது கோல் 52 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 83 ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் எடுத்தது.