சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது பேசிய மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளதாகவும் கூறினார்.
இதன்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால் வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும்.
பொருத்தமான நிதிக் கொள்கைகள் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த உதவும் என்பதையும் ஆளுநர் இதன்போது எடுத்துரைத்தார்.