இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பானது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இதுவரை காலமும் ஆசியாவின் இரு வேறு துருவங்களாகக் கருதப்பட்டு வந்த இந்த இரு நாடுகளும் தற்போது ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக வெளியான தகவல் உலக நாடுகள் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு இராணுவமும் மோதிக்கொண்டதை தொடர்ந்து இந்த பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை கடுமையாகப் பாதித்திருந்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயும் முக்கிய பேச்சுவார்த்தைகள் எதுவும் பெரிய அளவில் இடம்பெறவில்லை.
அத்துடன் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்பட்டது. குறிப்பாக 1962ம் ஆண்டு இந்தியா – சீனா போரானது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. இது இமயமலைப் பகுதியில் பிராந்திய மோதல்கள் மற்றும் இராணுவ மோதல்கள் என வகைப்படுத்தப்பட்டது. பிராந்திய உரிமை கோரல்கள் மற்றும் புவிசார் அரசியல் அபிலாஷைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்தன.
இறுதியில் இப்பிரச்சனை ஆயுத மோதல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது. இந்த மோதலைத் தொடர்ந்து, எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், எல்லையில் அமைதியைப் பேணுவதற்கும் இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1988 இல் ராஜீவ் காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பயணம் இருதரப்பு உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இது உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான உறுதிப்பாட்டை எடுத்துரைந்திருந்தது. இந்த விஜயத்தின் போது, எல்லையில் அமைதி மற்றும் அமைதியை நிலைநிறுத்துவதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் இராஜதந்திர முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்து, எல்லைப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான ஒப்பந்தங்கள் இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில்
2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளாலும் அசாதாரணமான நிலைப்பாட்டை நீட்டிக்கவும் வழிவகுத்தது. சமகால பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அப்பால் நாட்டின் எல்லைகளையும் இறையாண்மையையும் பாதுகாப்பது மிக முக்கியமானது. இந்த செயற்பாடானது உடனடி பாதுகாப்பு பிரச்சனை மட்டுமல்ல, பரந்த பொருளாதார பாதிப்புகளுக்கும் தீர்வு காண்பதற்கான அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்திய அரசாங்கம் சீனாவின் புகழ் பெற்ற செயலிகள் மற்றும் சில தயாரிப்புக்களுக்கு தடைவிதித்தது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலும் மீண்டும் பனிப்போரொன்று நிலவி வந்தது.
எனினும் கால்வான் சம்பவம் இடம்பெற்று 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அது போன்ற சம்பவமொன்று மீண்டும் பதிவாகவில்லை. பெரியதாக எந்த பிரச்னையும் வெடிக்கவில்லை,
இந்நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண தாம் முன்வந்துள்ளதாகவும், இது போன்ற விடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் சீனாவின் மன மாற்றத்திற்கு வேறு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்தியாவும், சீனாவும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் சுதந்திரம் பெற்றன. எனினும் உலகப் பொருளாதாரத்தில் சீனா முதலாவது இடத்திலும், இந்தியா 5 ஆவது இடத்திலும் உள்ளன.
குறிப்பாக இலத்திரனியல் உபகரணங்களின் உற்பத்தியில் சீனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறித்த வளர்ச்சியானது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன்காரணமாக அந்நாடுகள் சீனாவின் தயாரிப்புகளை பாரிய அளவில் புறக்கணித்து வருகின்றன.
இதனையடுத்து உலக சந்தையில் சீன பொருட்களுக்கான கேள்வி கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து கொண்டு வருகின்றது.
எனவே தமது பொருளாதார சந்தையை மேலும் வலுப்படுத்தும் கட்டாயத்துக்கு சீன அரசு தள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யாவும், ஆப்பிரிக்காவும் சீன பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் அது சீனப் பொருளாதாரம் வலுவடைய போதாது என்பதே உண்மையாகும். இந்நிலையில் ஆசியாவின் முதன்மை நாடாக சீனாவும் இந்தியாவும் போட்டிப்போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இன்றுவரை அந்த போட்டியில் சீனாதான் முதலிடத்தில் காணப்படுகின்றது, இருந்தாலும் உலக பொருளாதாரத்தில் முதன்மை நாடாக மாற சீனா தொழில்நுட்பரீதியாகவும் பொருளாதா ரீதியாகவும் பல விடயங்களை நடைமுறைபடுத்தி வரும் நிலையில் தற்போது புதிய யுக்தியாக
சீனாவின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவiயில் இதன் முதற்கட்டமாக இன்று இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் பெய்ஜிங்கில் சந்தித்து உரையாடியிருந்தார்கள் இந்த சந்திப்பானது நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்தியாவுடனான புரிதலை அதிகரிக்கவும், அதன் நலன்களை மதிக்கவும் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொடர் உரையாடல்கள்தான் இரு நாட்டின் நம்பிக்கையை வலுப்படுத்தும் எனவும், வேறுபாடுகளை கலைந்து இரு நாட்டின் உறவுகளை சிறப்பாக்க தாம் தயாராக உள்ளதாகவும் லின் ஜியான் தெரிவித்துள்ளார். ஆண்மையில் ரஷியாவில் இடம்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்தபோது எட்டப்பட்ட பொதுவான புரிதல்களைச் செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார். சீனாவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துமா அல்லது பாதகமான நிலையை ஏற்படுத்துமா என்பதில் பாரிய ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் இந்தியா நல்லுறவினைப் பேணி வருகின்றது. எனினும் சீனா தற்போது இந்தியாவுடன் இணைந்து கொண்டால் சீனாவினை எதிர்க்கும் உலக நாடுகள் இந்தியாவையும் எதிர்க்கும் நிலை ஏற்படுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இருந்தாலும் எல்லைகளை பகிர்ந்துகொள்ளும் இரு நாடுகள் தத்தமது இலக்குகளை அடைந்து கொள்ளவும் பொருளாதார ஸ்திரதன்மையை பேணவும் இவவாறான இராஜதந்திர உறவுகளை கையாள்வது என்பது சாதாரண விடயம் தான், இருப்பினும் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இவ்சந்திப்புக்கள் என்பது எதிர்காலத்தில் ஏற்படபோகும் உலக மாற்றங்கள்,பொருளாதார சிக்கல்களில் வளர்ந்த சீனாவையும்,வளர்ந்துவரும் இந்தியாவையும் இவ் பேச்சுவார்த்;தைகள் அதில் எட்டப்படும் இலக்குகள் மற்றும் முடிவுகள் சில நேரங்களில் பல சாதகமான பாதைகளையும் அமைத்துகொடுக்கவும் வாய்ப்புள்ளது….
…………………………………………..
.இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பானது உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவின் இரு வேறு துருவங்களாகக் கருதப்படும் சீனாவும், இந்தியாவும் தற்போது ஒன்றிணைந்து பயணிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் உலக அரசியல் அரங்கில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. இதற்கு அண்மையில் சீன அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பே காரணமாகும்.
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சீன அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பே காரணமாகும்.
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும், சீன மீண்டும் அறிவித்துள்ளது.
இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டதை தொடர்ந்து இந்த பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன
கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை கடுமையாகப் பாதித்திருந்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயும் முக்கிய பேச்சுவார்த்தைகள் எதுவும் பெரிய அளவில் இடம்பெறவில்லை.