English Football League தொடரில் மென் யுனைட்டட்டை வீழ்த்தி டொட்டஹம் அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் கால்பந்துத் தொடரான English Football League (EFL) கிண்ணத்தின் காலிறுதிப்போட்டியின் கடைசி காலிறுதிப் போட்டியானது மென்செஸ்டர் யுனைட்ட Manchester United மற்றும் டொட்டஹம் (Tottenham) அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்றது.
இரு அணிகளுமே அரையிறுதி செல்லும் முனைப்புடன் ஆக்ரோசமாக விளையாடினார்கள், போட்டியின் 15வது நிமிடத்தில் டொட்டஹம் அணியின் டொமினிக் சொலன்கி தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 1-0 என டொட்டஹம் முன்னிலைப்பெற்ற நிலையில் முதல்பாதி முடிவடைந்து இரண்டாவது பாதி தொடங்கிய நிலையில் முதல் நிமிடத்திலேயே டேஜன் குழூசெவ்ஸ்கி டொட்டஹம் அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார்.
அடுத்து 54வது நிமிடத்தில் மீண்டும் டொமினிக் சொலன்கி தனது இரண்டாவது கோலினை பதிவு செய்து டொட்டஹம் அணியின் கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தினார். தனது நிலையை உணர்ந்த மென் யுனைட்ட அணி போட்டியை தன்பக்கம் திருப்பியது. அவ்வணியின் முதல் கோலினை 63வது நிமிடத்தில் ஜோசுவா ஸிர்க்ஸி அடித்தார். 3-1 என போட்டி மாறிய நிலையில் அடுத்த 7வது நிமிடத்தில் அமட் டியால்லோ தனது பங்கிற்கு ஒரு கோலினை பதிவு செய்து 3-2 என போட்டியை விறுவிறுப்பாக்கினார்.
பின்னர் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள டொட்டஹம் அணியும் போட்டியை சமப்படுத்த மென் யுனைட்ட அணியும் தீவீரமாக களமிறங்கினார்கள், போட்டியின் 88வது நிமிடத்தில் டொட்டஹம் அணியின் சன் ஹேயுங் மின் தனது அணியின் கோல் எண்ணிக்கையை 4ஆக உயர்த்தினார். மென் யுனைட்ட அணி 2 கோல்களால் பின் தங்கியிருந்த நிலையில் போட்டி நேரம் முடிவுக்கு வந்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் ஜொன்னி எவன்ஸ் ஒரு கோலினை பதிவு செய்து தனது அணியின் கோல் எண்ணிக்கையை 3ஆப உயர்த்தினார். இறுதியில் டொட்டஹம் அணி 4-3 என வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்று அசத்தியது