நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த ரோஹித அபேகுணவர்தன அந்தப் பதவியிலிந்து நீக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, புதிய கிராமத் தலைவர்கள் மற்றும் பிரதேச தலைவர்கள் நியமனத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.