யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இன்று காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றையொன்று மோதிக் கொண்டதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்ற 21 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.