ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கிலிருந்து வடமேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு (20-30) கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.
பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடல் நிலை:
பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலும் கடற்பரப்புகளில் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.