புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றியுள்ளார்.
தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தற்போது தனது இரண்டாவது சேவை நீடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு மற்றுமொரு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் ஓய்வுபெறும் தீர்மானத்துடன், மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக பதவியேற்கவுள்ளார்.