திருமண், திருநீறு, விபூதி எனப்படும் இந்த சாம்பல் பிரசாதம் சிவனுக்கு உரியது ஆகும்.
எதுவுமே கையில் இல்லாமல் பிறந்து மீண்டும் எதுவுமே கையில் இல்லாமல் சாம்பலாக தான் கரைந்து போகும் இந்த பூத உடல் என்னும் தத்துவத்தை எடுத்துச் சொல்லக் கூடிய திருநீறு, தினமும் அணிபவர்களுக்கு துன்பம் நெருங்குவதில்லை.
கடந்த காலத்தில் நாம் செய்த பாவங்களையும், நிகழ்காலத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்களையும், எதிர்காலத்தில் நாம் செய்ய போகும் பாவங்களையும் மன்னிக்கக் கூடிய ஒரே ஒரு சக்தி இந்த விபூதிக்கு மட்டுமே உண்டு.
தினமும் விபூதி அணிபவர்களுக்கு பாவங்களை செய்ய வேண்டும் என்னும் எண்ணமே தோன்றாதாம்.
தினமும் காலையில் எழுந்து முடித்து குளித்து சுத்தபத்தமாக வெளியில் கிளம்பும் முன்பு பூஜை அறைக்குச் சென்று அங்குள்ள திருநீற்றை வலது கையில் மூன்று விரல்களால் எடுத்து பட்டை போல பூசிக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று கோடுகளும் முக்காலத்தை குறிப்பவை ஆகும்.
முக்காலமும் நாம் செய்யும் பாவங்களில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், நம் சிந்தையை ஒழுங்கு செய்யவும் கூடிய சக்தி வாய்ந்த குறியீடாகும்.
திருநீறு அணியும் பொழுது கீழ்காணும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பது ஐதீகம். திருநீறு அணியும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ: மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே!
தினமும் திருநீறு அணியும் பொழுது, நெற்றியில் இருக்கும் நீரை உறிந்து, தலை பாரத்தை உண்டு பண்ணாமல் தடுக்கும். இதனால் நாம் யோசிக்கும் திறன் அதிகரிக்கும்.
மூளை சுறுசுறுப்பு அடையும், அடிக்கடி எதையும் மறக்காமல் நினைவாற்றலை அதிகரிக்கும். உடலும், மனமும் தூய்மை செய்யக் கூடிய இந்த திருநீறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தினமும் அணிவது நல்லது.