மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினால் நேற்று (06) இரவு வெலிகம பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதுடைய வெலிகம பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞர் காயமடைந்தனர்.
அண்மையில் மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்த கைதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த குழுவினரே மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.