தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உருவெடுத்து இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்கி வருகிறார். கூலி படத்தில் நடிகர் ரஜினியுடன் சத்யராஜ், நாக்ராஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் கூலி திரைப்படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாகுன் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கூலி படத்தை இயக்கும் இயக்குநர் லோகேஷ்னராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அஜித் குமார் படம் இயக்குவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்
அதில் அவர், “எல்லோரையும் போல், எனக்கும் அஜித் குமார் சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கூடிய சீக்கிரம் அது நடக்கும் என்று நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.


















