மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்
உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன
பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வழக்கின் சாட்சிகள் என்றும், விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்றவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்