தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே (Anrich Nortje) முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) புதன்கிழமை இந்த செய்தியை உறுதிப்படுத்தியது.
திங்கட்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் பின்னர் நோர்ஜேவின் காயம் தெரியவந்தது.
துரதிர்ஷ்டவசமாக, அவரது குணமடைவு காலம் அவரை எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற அனுமதிக்காது.
பெப்ரவரி 21 அன்று கராச்சியில் தென்னாப்பிரிக்கா தனது தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
எட்டு வருடங்களின் பின்னர் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியானது பெப்ரவரி 19 முதல் மார்ச் 09 வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும்.