இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று நடைபெற்றதுள்ளது
இதன்போது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இருவரும் நீண்டநேரம் கலந்துரையாடினர்.
அத்துடன் பல தசாப்தங்களாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்தார்.
மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொண்டு, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் சஜித் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .














