அமெரிக்காவில் சனிக்கிழமை (18) பிற்பகுதியில் டிக்டொக் செயலியானது ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
170 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் இயங்குதளத்தை இன்று (19) முதல் நடைமுறைக்கு கொண்டுவரும் சட்டத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்த ஒரு நாள் கழித்து சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீங்கை தளமாகக் கொண்ட பைட் டான்ஸுக்குச் சொந்தமான, குறுகிய வடிவ வீடியோ பயன்பாடானது சனிக்கிழமைக்கு முன் சுமார் 170 மில்லியன் அமெரிக்க பயனர்களைக் கொண்டிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அதன் தடைக்கு வழிவகுத்த சட்டமூலத்தை காங்கிரஸ் நிறைவேற்றியது.
இந்த செயலி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் முதலீட்டாளர்கள் பயன்பாட்டை புதுப்பிக்க ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவில் பயன்பாட்டின் எதிர்காலம் குறித்து இன்னும் ஏராளமான கேள்விகள் உள்ளன.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், திங்களன்று பதவியேற்ற பின்னர் டிக்டோக்கை 90 நாள் தடையில் இருந்து “பெரும்பாலும்” விடுவிப்பதாகக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.