இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி:20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
போட்டியில் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ஓட்டங்களை விளாசினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு (22) நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா, பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணித் தலைவர் ஜோஸ் பட்லர் மாத்திரம் அதிகபடியாக 44 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றார்.
பந்து விச்சில் இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஹர்த்திக் பாண்டியா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12.5 ஓவரில் 133 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக வருன் வருண் சக்ரவர்த்தி தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (25) சென்னை, சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.